இலங்கை தமிழ பெண் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார்
அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 41 வயதான மனோகலா ஜெனதர்ஸன் என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது ஆறு வயது மகனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைப்பான ஆஸியோவின் அண்மைய தீர்மானத்திற்கு அமைய இவாகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார். இவாகள் தற்போது விலாவுட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஆஸியோவின் தீர்மானத்திற்கு அமைய மனோகலாவும் அவரது ஆறு வயது மகனான ராகவனும் விடுவிக்கப்படவுள்ளனர். இதேவேளை தேவை ஏற்பட்டால் இவாகள் தொடா்பாக மீண்டும் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்படும் என ஆஸியோ மேலும் அறிவித்துள்ளது.
காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு த.தே.கூட்டமைப்பு உதவ முன்வர வேண்டும்!- அஸாத் சாலி
வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அசாத் சாலி இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் ஆட்சியாளர்களிடம் உரிய தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. இவ்வாறான ஒரு சூழலில் அண்மைக்காலங்களாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான காணி அபகரிப்பு பிரச்சினைக்கு அந்த மக்கள் சார்பாக தங்களது கட்சி மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் இந்த காணி அபகரிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயத்தில் யாரும் அவர்களுக்கு இதுவரை உதவ முன்வந்ததாகத் தெரியவில்லை. நீங்கள் மேற்கொண்டுள்ள சட்ட…
அடக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது அவசியம்; யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர்
சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் இதனை குறிப்பிட்டார் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்
நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை;சம்பந்தன்
சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் இதை வலியுறுத்தினார். சுதந்திரம் என்பது நாட்டில் தவறான வழியில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும் ஜெனிவா தீர்மானத்தை நேர்மையான முறையில் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தை அவர் ஆரம்பித்து வைத்து சம்பந்தன் தனது உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிவிவகார அமைச்சரும் இந்தச் சபையில் இதற்கு முன்னர் கூற்றுகளை வெளியிட்டிருந்தனர். வட பிராந்தியத்தில் இராணுவத்தைக் குறைத்தல் தடுத்துவைப்பு தொடர்பிலான அரசின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்தல் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு தகவல் அறியும் உரிமை காணிப் பிரச்சினைக்கான தீர்வுப் பொறிமுறை நீதித்துறையின் சுயாதீனம் ஆகிய விடயங்கள் மேற்கூறப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயங்களை நேர்மையான முறையில் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும்….
தாமரா குணாநாயகம் மீண்டும் தெரிவு
இலங்கை அரசாங்கத்தினால் ஜெனீவா வதிவிடப்பிரதி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தாமரா குணநாயகம் மீண்டும் ஒருமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் அரசாங்கங்களுக்கு இடையிலானஅபிவிருத்தி குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பான கூட்டம் கடந்த 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை இடம்பெற்றது இதன்போது எவ்வித எதிர்ப்புகளும் இன்றி மூன்றாம் முறையாக தாமரா குணநாயகம் தெரிவுசெய்யப்பட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் பதவிகளுக்கு இலங்கையின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தடைகளை ஏற்படுத்தி வந்தார். இதனை கருத்திற்கொள்ளாமலேயே தாமரா குணநாயகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது
கிழக்கு மாகாணசபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாணசபையில் நேற்று இடம்பெற்ற அமர்வு திகதியின்றி ஒத்திவைக்கப்பட்டது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உட்பட்ட எதிர்க்கட்சிகள் மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளை மையப்படுத்தி தனிநபர் பிரேரணைகளை முன்வைத்தன. எனினும் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி சபையின் தவிசாளர் சபையை ஒத்திவைத்தார் இதனை அடுத்தே சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேரும் சபையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்
அதிகாரப்பரவலாக்கலில் மாற்றம் – ஐக்கிய தேசியக்கட்சி
அதிகாரப்பரலாக்க கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார் எனினும் 13 ஆம் திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டே இந்த திருத்தம் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு தரும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அறிமுகப்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இந்தநிலையில் எதிர்வரும் 6 மாதக்காலத்துக்குள் ஐக்கிய தேசியக்கட்சி தமது அரசியல் அமைப்பு திருத்தத்தை வெளியிடு;;ம் என்று திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்
வாக்காளர் பட்டியலை கோரும் இராணுவ புலனாய்வாளர்கள்
2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றுச் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் வாக்காளர் பட்டியலைக் கொண்டு செல்லும் புலனாய்வாளர்கள் அவற்றைப் போட்டோ பிரதி செய்துவிட்டு மீண்டும் கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் 2012 ஆம் அண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ளவர்களில் வெளிநாடு சென்றவர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் இறந்தவர்கள் ஆகியோரின் விவரங்களையும் கிராம சேவையாளர்களிமிருந்து புலனாய்வாளர்கள் பெறுவதாக கூறப்படுகிறது. வடமாகாண சபைத்…
சிவசக்தி ஆனந்தன் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார். அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள். காலை 10.00 மணிக்கு ஆரம்பமான விசாரணை 12.15 வரையில் தொடர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கடந்த வருடத்தில் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட இலக்கங்களின்படி சிவசக்த்தி ஆனந்தனுக்கு அங்கிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும் சிவசக்தி ஆனந்தனிடமிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அதிகாரிகள் அவை தொடர்பாக…
இலங்கை தமிழர் குடும்பத்தை கொலை செய்து தாமும் தற்கொலை
சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் என்ற இடத்தில் வசித்து வந்த இலங்கை தமிழ்க்குடும்பம் ஒன்றின் குடும்பஸ்தர் தமது தாய்,மனைவி (45) மற்றும் மகளை(12) கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்துக்கொண்டார். சுந்தரேசன் என்ற சேர்ந்த இந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதியை சேர்ந்த அவரது மனைவியான சித்ரா மற்றும் சமிரா மற்றும் தமது தாய் ஆகியோருடன் 10 வருடங்களுக்கு முன்னர் சென்னையில் குடியேறி,வாடகை வாகன நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இந்தநிலையில் அவரது வாடகை வாகன நிறுவனம் நட்டத்தில் இயங்கிவந்தமையை அடுத்து விரக்கியுற்ற சுந்தரேசன்,தமது குடும்பத்தாரை கொலை செய்து விட்டு தாமும் தாம்பரம் நோக்கி சென்ற புகையிரத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.










