Hot News
Home » Uncategorized @ta » இடம்பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு

இடம்பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு

வடக்கு மாகாணசபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில்,இடம்பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

1983 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

எனினும் இந்த வாய்ப்பு, இடம்பெயர்ந்தவர்கள் தாம் தற்போது வாழும் வேறு மாவட்டங்களில் தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்யாமல் இருந்தால் மாத்திரமே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது

இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால்,சுமார் 15 ஆயிரம் பேர் எதிர்வரும் செப்டம்பர் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்கமுடியும்

Author: TELO Media Team 1