Hot News
Home » செய்திகள் » 43 வது பிரதம நீதியரசர் மீதான தொந்தரவுகளை நிறுத்துக- சட்டத்தரணிகள் சங்கம்

43 வது பிரதம நீதியரசர் மீதான தொந்தரவுகளை நிறுத்துக- சட்டத்தரணிகள் சங்கம்

43 வது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மீது மேற்கொள்ளப்படும் தொந்தரவுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்டத்தரணிகள் சங்கம் இது தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

சிராணி பண்டாரநாயக்கவின் மீது தேவையற்ற ரீதியில் தொந்தரவுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதியன்று மாத்தறைக்கு வரும் பிரதமநீதியரசர் மொஹான் பீரிஸை வரவேற்பதில்லை என்று மாத்தறை சட்டத்தரணிகள் சங்கம் தீhமானம் எடுத்துள்ளது

Author: TELO Media Team 1