Hot News
Home » செய்திகள் » 19 வது திருத்தத்துக்கு தாம் எதிர்ப்பு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

19 வது திருத்தத்துக்கு தாம் எதிர்ப்பு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இலங்கையில் 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

19 வது திருத்தத்தி;ன்படி 17வது திருத்தத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரங்கள் நீக்கப்படுவது நியாயமற்ற செயல் என்று ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில் அரசாங்கத்துடன் தமது கட்சி பேச்சு நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் வடக்கு மாகாணசபைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று ஹசன் அலி கூறியுள்ளார்.

Author: TELO Media Team 1