Hot News
Home » செய்திகள் » கண்காணிப்பாளர் தொடர்பில் கோரிக்கை இல்லை- ஐரோப்பிய ஒன்றியம்

கண்காணிப்பாளர் தொடர்பில் கோரிக்கை இல்லை- ஐரோப்பிய ஒன்றியம்

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் தமது கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவது குறித்து தமக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

ஒன்றியத்தின் தூதுவர் பேனாட் செவேஜ் இதனை தெரிவித்துள்ளார்

கண்காணிப்பாளர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதற்கு உரிய பதில் வழங்கப்படு;ம் என்று செவேஜ் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்

எனினும் தேர்தல்கள் திணைக்களம் இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை

இந்தநிலையில் குறித்த தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றியக்கண்காணிப்பாளர்கள் தேவை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Author: TELO Media Team 1