Hot News
Home » செய்திகள் » யாழ் வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்!

யாழ் வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்!

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை நல்லூருக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போதே உழவு இயந்திரத்தில் சென்ற 20 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.

எனினும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே உழவு இயந்திரம் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர

Author: TELO Media Team 1