Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதி ஆளும் கூட்டணி கட்சிகளை சந்திக்கிறார்

ஜனாதிபதி ஆளும் கூட்டணி கட்சிகளை சந்திக்கிறார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. எதிர்வரும் தினம் ஒன்றில்,ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சிகளை சந்திக்கவுள்ளார்

இதன்போது வடக்கு மாகாணசபைத்தேர்தல் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ளதாக அரசாங்கத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் கூட்டணிக்குள் பெரும்பாலான கட்சிகள் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்த தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இதற்காக அரசாங்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தவும் அந்தக்கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கூட்டணியில் உள்ள இடதுசாரிக்கட்சிகள் தேர்தலை நடத்த ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் 1987 ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கு மாகாணசபைக்கு இந்தமுறையே முதல் தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: TELO Media Team 1