Hot News
Home » செய்திகள் » அரசியல் தீர்வுக்காக ஐதேக புதிய அரசியலமைப்பு

அரசியல் தீர்வுக்காக ஐதேக புதிய அரசியலமைப்பு

நடைமுறை பிரச்சினைக்கு தீர்வைக்காணும் வகையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி,புதிய அரசியல்அமைப்பு யோசனையை தயாரிக்கவுள்ளது.

கட்சி தகவல்களின்படி,இதற்காக கட்சி பிரதிநிதிகள் மத்தியில் இருந்து குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இந்தக்குழுவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார்.

இந்தநிலையில் குறித்த குழு எதிர்வரும் 29 ஆம் திகதியன்று முதல்தடவையாக சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

அத்துடன் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்கப்படும் போது இனக்குழுக்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படு;;ம் என்று அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்

 

Author: TELO Media Team 1