Hot News
Home » செய்திகள் » பாதுகாப்பு குறித்து இந்தியா கேள்வி எழுப்பியதா? கோட்டா, ஜி எல்லிடம் வினவல்

பாதுகாப்பு குறித்து இந்தியா கேள்வி எழுப்பியதா? கோட்டா, ஜி எல்லிடம் வினவல்

யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக கூறப்படுவது குறித்து பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் வினவியுள்ளார்

கடந்த வாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ_டன் தொலைபேசி தொடர்பை ஏற்படு;த்தி 13 வது அரசியல் அமைப்பில் இருந்து அதிகாரங்கள் எவற்றையும் நீக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன

இதன்போது குர்ஷித் பலாலி-காங்கேசன்துறை பாதுகாப்பு வலய விஸ்தரிப்புக்குறித்தும் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன

இது தொடர்பிலேயே கோட்டாபய, ஜி எல் பீரிஸ_டன் கலந்துரையாடியுள்ளார்

இதன்போது கருத்துரைத்துள்ள கோட்டாபய,யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்

அதேநேரம் 13 வது திருத்தத்தை இலங்கை மக்கள் கோரவில்லை என்றும் கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்

Author: TELO Media Team 1