Hot News
Home » செய்திகள் » இலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே

இலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே

இலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜதந்திர முறைமைகளை மதிக்கவேண்டும் என்று நோர்வே கோரியுள்ளது

நோர்வேயின் முன்னாள் தூதுவர் உட்பட்ட மூவர்;, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நிதியளிப்பை மேற்கொண்ட போது உரிய ராஜதந்திர முறைகளை கையாளவில்லை என்று கொழும்;பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தமையை அடுத்து நோர்வேயின் தூதுவர் கிரீட் லொச்சின் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்

நோர்வே, ராஜதந்திர முறைகளை உரிய முறையில் வரையறுத்துள்ள வியன்னா பிரகடனத்துக்கு மதிப்பளித்து வருகிறது

குறிப்பாக இலங்கையில் உள்ள ராஜதந்திரிகள் அனுபவிக்கும் சிறப்புரிமைகளையே நோர்வே ராஜதந்திரிகளும் அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Author: TELO Media Team 1