Hot News
Home » செய்திகள் » இடமாற்றம் தேவையில்லை – மாலைத்தீவு

இடமாற்றம் தேவையில்லை – மாலைத்தீவு

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கான தேவைகள் எவையும் இல்லை என்று மாலைத்தீவு தெரிவித்துள்ளது

மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல் சமத் அப்துல்லா இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கு குறுகிய கால பயணத்தை மேற்கொண்டிருந்த அவர்,இலங்கையில் இருந்து பொதுநலவாய மாநாட்டை வேறு நாடு ஒன்றுக்கு மாற்றும் யோசனைக்கு தமது நாடு எதிர்ப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்

பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாடு எதிர்வரும் நவம்பர் 15 முதல் 17 வரை இலங்கையில் நடைபெறவுள்ளது

Author: TELO Media Team 1