Hot News
Home » செய்திகள் » 24 தமிழக மீனவர்கள் கைது

24 தமிழக மீனவர்கள் கைது

24 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் 785 படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவற்றில் 6 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அதிலிருந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மீன்களின் வளர்ச்சிக்காக 45 நாட்கள் மீன்பிடி தடைசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதல் சம்பவம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Author: TELO Media Team 1