Hot News
Home » செய்திகள் » மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் யாழில் சிங்களத் திரைப்படம்

மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் யாழில் சிங்களத் திரைப்படம்

யாழ்ப்பாணத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்களத் திரைப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

சந்திர ரத்ன மாபிடிகம இயக்கியுள்ள ‘சிஹினய திகே என்ன‘- (கனவின் வழி வாருங்கள்) என்ற திரைப்படமே எதிர்வரும் வரும் 20 ஆம் திகதி யாழ்.நகரில் உள்ள ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

தமிழ் உபதலைப்புகளுடன் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

சனத்குணதிலக, வீனா ஜயக்கொடி, உதாரி வர்ணகுலசூரிய , அமில அபயசேகர, நயனா உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளன.

Author: TELO Admin