Hot News
Home » செய்திகள் » தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் வீடுகள் மீது கழிவு எண்ணெய் ஊற்றி தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் வீடுகள் மீது கழிவு எண்ணெய் ஊற்றி தாக்குதல்

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் கழிவு எண்ணெய் ஊற்றியதுடன், வீடுகளுக்கு கல்லுகளினால் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக இன்று காலை நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.குடத்தனையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தங்கராசா காண்டீபனின் வீட்டிலும் நெல்லியடியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் எட்வேட் இராயப்பு ஆனந்தராஜாவின் வீட்டிலும் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் கதவுகளும் சேதமடைந்துள்ளன.சிறைச்சாலையில் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி படையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நாளை புதன்கிழமை நெல்லியடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் உப தலைவர் வீடுகளின் மீது கழிவு எண்ணை வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

Author: TELO Admin