Hot News
Home » செய்திகள் » அசாத் சாலி தமிழ் கட்சியொன்றில் இணையத் திட்டம்

அசாத் சாலி தமிழ் கட்சியொன்றில் இணையத் திட்டம்

கொழும்பு மாநகரசயைபின் ஆளும் கட்சி உறுப்பினர் அசாத் சாலி தமிழ் அரசியல் கட்சியொன்றில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் கிழக்கு மாகாணசகபைத் தேர்தலில் குறித்த தமிழ் கட்சியில் இணைந்து அசாத் சாலி போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அசாத் சாலி கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த தமிழ் அரசியல் கட்சி அசாத் சாலியை தனது வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.நீண்ட காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்து வந்த அசாத் சாலி அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்காமை தொடர்பில் ஆளும் கட்சியுடன் அசாத் சாலி முறுகலை ஏற்படுத்தி, சுயாதீனமாக இயங்கி வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

Author: TELO Admin