Hot News
Home » செய்திகள் » TNA விற்கும் SLMC க்கும் இடையில் கூட்டணி ஏற்படுத்த முயற்சிக்கப்படவில்லை – நோர்வே

TNA விற்கும் SLMC க்கும் இடையில் கூட்டணி ஏற்படுத்த முயற்சிக்கப்படவில்லை – நோர்வே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்த முயற்சிக்கப்படவில்லை என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.வேறும் நாடுகளின் உள்விவகாரங்கள் மற்றும் கட்சிஅரசியலில் நோர்வே தலையீடு செய்யாது என அந்நாட்டுக்கான தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் அரசியல் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் நோர்வே முனைப்பு காட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இதேவேளை, இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டமைப்பை ஏற்படுத்த நோர்வே தூதரகம் முயற்சி மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இந்த விடயம் அரசாங்கத்திற்கும் தெரியும் என அந்த ஊடகம் மீளவும் தெரிவித்துள்ளது.

Author: TELO Admin