Hot News
Home » செய்திகள் » பிரித்தானிய ஆவண விருதுக்காக “இலங்கையின் கொலைக்களம்” பரிந்துரை

பிரித்தானிய ஆவண விருதுக்காக “இலங்கையின் கொலைக்களம்” பரிந்துரை

பிரித்தானிய ஆவண விருதுக்காக சனல் 4 கெலம் மெக்ரேயின் இலங்கையின் கொலைக்களங்கள் “The Killing Fields Of Sri Lanka” பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

2013ம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் ஆவண விருதுகளுக்காக 8 ஆவணப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அதில், இலங்கையின் கொலைக்களங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக 41 வது பிரித்தானிய ஆவண விருதுக்குழு நேற்று அறிவித்துள்ளது.

சுமார் 12 தலைப்புக்களின் கீழ் இந்த ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் செனல் 4 வின் காஸ்மீர் டோச்சர் டெய்ல் (Kashmir’s Torture Trail )என்ற ஆவணப்படமும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர ஜோர்தான் சிரியா பிபிசியின் தெ சேம் ஒப் கத்தோலிக் சேர்ச் ( The Shame of the Catholic Church) என்ற படமும் பரிந்துரைக்கு உட்பட்டுள்ளது.

Author: TELO Media Team 1