Hot News
Home » செய்திகள் » வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் விந்தன் கனகரட்ணத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இன்று மாலை அரியாலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வாளர்கள் விந்தன் தொடர்பாக பொது மக்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் விந்தனிற்கும் என்ன தொடர்பு? என்பது தொடர்பாகவும் விந்தன் பாவிக்கும் வாகனங்கள் தொடர்பாகவும் அவர்கள் விசாரித்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களான சட்டத்தரணி சயந்தன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கியத்தர் எழிலனின் மனைவி ஆனந்தி ஆகியோருக்கும் இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Author: TELO Media Team 1