Hot News
Home » செய்திகள் » இந்திய மீனவர்கள் 74 பேர் கைது

இந்திய மீனவர்கள் 74 பேர் கைது

மேலும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

த பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா இந்த இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு இவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்; இந்த செய்தியை கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய நிராகரித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 65 தமிழக மீனவர்கள் வடக்கு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: TELO Media Team 1