Hot News
Home » செய்திகள் » காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லச்மன் கதிர்காமர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கதிர்காமரின் மகனான எஸ் ஜே கிறிஸ்டியன் கதிர்காமர். தமது மனுவில் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்ää யாழ்ப்பாண காணி அதிகாரி ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்

மனுதாரர் ஏற்கனவே இலங்கையின் சுற்றாடல்துறை ஆலோசகராக 1995 ஆம் ஆண்டில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் தமது உறவினர்களான ராஜநாதன் கதிர்காமர்ää செல்வநாதன் கதிர்காமர் ஆகியோர் இராணுவத்துறையில் சேவை ஆற்றியதை மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்தநிலையில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை மாவிட்டப்புரம் ஆழ்வார்மலையடியில் கீரிமலைக்கு அருகில் அமைந்துள்ள தமது காணி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டு அதனை தடுத்து நிறுத்துமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

Author: TELO Media Team 1