Hot News
Home » செய்திகள் » 20 வது சீர்திருத்தத்துக்கு கிழக்கு மற்றும் மேல் மாகாண சபையில் அங்கீகாரம்

20 வது சீர்திருத்தத்துக்கு கிழக்கு மற்றும் மேல் மாகாண சபையில் அங்கீகாரம்

20வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் கிழக்குமாகாண சபையில் 17 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின் போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும் சட்டமூலத்துக்கு எதிராக 8 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வாக்கெடுப்பின் போது பதற்ற நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் மேல்மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 45 வாக்குகளும், எதிராக 28 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, 5 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.