Hot News
Home » செய்திகள் » இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் முன்னேற்றம் தேவை

இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் முன்னேற்றம் தேவை

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பல விடயங்களில் இன்னும் மீளமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட நிலை அதிகாரிகள் பிரசல்ஸில் இருந்து வருகை தந்து கடந்த 10 நாட்களாக தகவல் அறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள 27 சர்வதேச சாசனங்களின் நடைமுறை அடிப்படைகளை வைத்துக் கொண்டு குறித்த அதிகாரிகள் இலங்கையில் அமைச்சர்கள், சமூக பணியாளர்கள், தொழிட்சங்கங்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்தனர்.

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் சென்ற அவர்கள், வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனையும் சந்தித்தனர்.

அத்துடன் அவர்கள் மனித உரிமைகள் காப்பு பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.