Hot News
Home » செய்திகள் » சிறுபான்மை சமூகத்துக்கு துரோகமான அரசியல் யாப்பாக 20வது திருத்தம் இருக்காது

சிறுபான்மை சமூகத்துக்கு துரோகமான அரசியல் யாப்பாக 20வது திருத்தம் இருக்காது

சிறுபான்மை சமூகத்துக்கு துரோகமான அரசியல் யாப்பாக 20வது திருத்த மில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.மட்டக்களப்பு,காத்தான்குடியில் (12.9.2017) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் 20வது திருத்தம் சிறுபான்மை சமூகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது

20வது திருத்தம் திருத்தத்துடன் வந்த போது கிழக்கு மாகாண சபையில் நாம் அதை நாம் ஏற்றுக் கொண்டு அங்கீகரித்துள்ளோம்.

இதன் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சமூகத்துக்கு துரோகம் இழைத்து விட்டார் என சிலர் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் இதன் மூலம் சமூகத்துக்கு என்ன துரோகம் இழைத்துள்ளார் என நான் கேட்க விரும்புகின்றேன்.

20வது திருத்தம் தற்போது திருத்தங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போதும் சிறுபான்மை சமூகத்திற்கு எந்த வித பாதிப்பும் கிடையாது.

20வது அரசியல் திருத்தம் என்னவென்று தெரியாமல் அதைப் படிக்காமல் அதைப்பற்றி சிலர் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கின்ற போது எந்தளவு இந்த சமூகத்தில் அக்கறை இவர்களுக்கு இருக்கின்றது என்ற உண்மையை விளங்கி கொள்ள முடிகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுடைய மத்திய குழுக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் இந்த 20வது திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதனை பூதாகரமாக பேசித்திரிந்தவர்கள் நமது மட்டக்களப்பு மாவட்டத்ததைச் சேர்ந்த அரசியல் வாதிகள் மாத்திரம் தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

இவர்கள் ஏன் இதனை பூதகரமாக்கி பேசித்திரிந்தார்கள். இதில் இவர்களுக்குள்ள பிரச்சினை என்ன என நான் கேட்க விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படுமாக இருந்தால் இவர்களுக்கென்ன பிரச்சினை

நாங்கள் இலஞ்சம் வாங்கினோமா அல்லது ஊழல் செய்தோமா, அல்லது இந்த மாகாண சபையின் பணத்தினை துஷ்பிரயோகம் செய்தோமா இவை எதுவுமில்லை.

இவர்களுடைய காழ்ப்புனர்ச்சியின் காரணமாகத்தான் இதனை எதிர்க்கின்றார்கள். நாங்கள் இந்த கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்யக் கூடாது என்பது தான் இவர்களது எதிர் பார்ப்பாகும்.

எங்கள் மீது இவர்கள் கொண்டுள்ள காழ்ப்புனர்ச்சி தான் இந்த 20வது திருத்தத்தை அவர்கள் எதிர்ப்பதற்கு காரணமாகும்.

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரைக்கும் கிழக்கு மாகாண சபையினால் 6700 மில்லியன் ரூபா மாத்திரமே கல்விக்காக செலவிடப்பட்டிருந்தது.

ஆனால் 2016ம் ஆண்டு மாத்திரம் 5000 மில்லியன் ரூபா ஒரே ஆண்டில் கல்விக்காக நாம் செலவு செய்துள்ளோம். இந்த நிதியை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வந்த பெருமை கிழக்கு மாகாண சபைக்கு இருக்கின்றது.

சிறுபான்மை சமூகத்துக்கு துரோகமான அரசியல் யாப்பாக 20வது திருத்தத்தை இவர்கள் காட்டுகின்றனர்.

கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு இந்த 20வது திருத்தத்தம் அநியாயம் செய்கின்ற அல்லது துரோகம் செய்கின்ற திருத்தமல்ல என்பதை நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

சிறுபான்மை சமூகங்களின் அரசியலை ஸ்த்திரப்படுத்துவதற்காக இந்த திருத்தம் வழி வகுக்கின்றது.

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தை 2018ல் ஏற்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் நாம் அடைந்து கொள்வதற்காக நாம் இந்த 20வது திருத்தத்தை ஆதரித்தோம்.

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு திறை மறைவில் மேற் கொள்ளப்படுகின்ற சதிகளுக்;கு எதிராக நாம் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.

புதிய அரசியல் யாப்பு வரக் கூடாது என்ற ஒரு துரோகத்தனமான செயலை செய்து விட்டு சிறுபான்மை சமூகங்களை காட்டிக் கொடுத்தவர்களாக சிறுபான்மை சமூகங்களின் அரசியல் தலைவர்களான நாங்கள் இருக்க முடியாது என்பதற்காகவே நாங்கள் திருத்தத்துடன் கூடிய அந்த 20வது திருத்தத்தை ஆதரித்துள்ளோம்

இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு மஹிந்தவையும், கோத்தாபையையும் ஆட்சியில் ஏற்றி ஒரு சிலர் அமைச்சர்களாக இருப்பதற்காக நாங்கள் செயற்பட முடியாது.

நாங்கள் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் விடிவை நோக்கி செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் இதனை கருத்திற் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.