Hot News
Home » செய்திகள் » எமது உயி­ரை­விட சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரி­மையே மேலா­னது

எமது உயி­ரை­விட சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரி­மையே மேலா­னது

எமது உயி­ரை­விட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரி­மையே எமக்கு மேலா­னது என நேற்று கேப்­பா­ப்பு­ல­வுக்கு விஜயம் செய்த ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட பிர­தி­நிதி பப்லு டி கிரிப்­பிடம் கேப்­பாப்­பு­லவு மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஐக்­கிய நாடுகள் சபையின் உண்மை,நீதி, நஷ்­ட ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற் கான விசேட பிர­திநிதி பப்லு டி கிரிப் நேற்று 226 ஆவது நாளாக கேப்­பா­ப்பு­லவில் அமைந்­துள்ள இரா­ணு­வத்­த­லை­மை­யக வாயிலில் தமது சொந்த நிலங்­களை கேட்டு போரா­டி­வரும் மக்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாடும் போதே மக்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

ஐ.நா. விசேட பிர­தி­நி­தி­யிடம் மக்கள் கருத்து தெரி­விக்­கையில் நாம் இன்­றுடன் (நேற்று) 219 ஆவது நாளாக கொட்டும் மழைக்கும் வெயி­லுக்கும் மத்­தியில் எமது சொந்த நிலங்­களை கேட்டு போரா­டு­கின்றோம். எமது நிலங்­களை விடு­விப்­ப­தாக அர­சாங்கம் பல­முறை பல வாக்­கு­று­தி­களை தந்து எம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வரு­கின்­றது. நாம் எவ்­வாறு எத்­தனை நாட்கள் இந்த வீதியில் இருந்து போரா­டு­வது?

யுத்தம் முடிந்து 9 வரு­டங்­க­ளாக நாம் அகதி முகாம் வாழ்க்கை வாழ்­கின்றோம். கேப்­பா­பு­லவு என்னும் பெயரில் மாதிரி கிராமம் ஒன்றில் அக­தி­கள்போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம் . தொடர்ந்தும் நாம் இவ்­வாறு எத்­தனை காலம் வாழ்­வது? எமது தலை­முறை ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்த எமது சொந்த நிலம் எமக்கு வேண்டும். எமது இனி­வரும் சந்­ததி அதில் நிம்­ம­தி­யாக வாழ­வேண்டும். அக­தி­முகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம். எமது சொந்த நிலம்தான் வேண்டும். நாம் தொடர்ந்து இங்கே போரா­டிக்­கொண்டே இருப்போம். எமது உயி­ரை­விட எமக்கு எமது உரி­மை­களே மேலா­வை­வை­யாகும். எமது பூர்­வீ­க­மான கேப்­பா­பு­லவு மண் எமக்கு வேண்டும். எமது கஸ்­டங்­களை இன்று நேரில் நீங்கள் வந்து பார்­வை­யி­டு­கின்­றீற்கள். உங்­க­ளுக்கு நாம் படும் வேத­னைகள். புரியும் என்று நினைக்­கின்றோம் என்­றனர்.

இதன்­போது சட்ட ரீதி­யாக உங்கள் நிலங்­களை பெறு­வ­தற்கு நீங்கள் ஏதும் முயற்­சி­களை எடுத்­தீர்­களா? என ஐநா பிர­தி­நிதி கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போது மக்கள் பதி­ல­ளிக்­கையில்;

ஆம் நாங்கள் ஏற்­க­னவே 2012 ஆம் ஆண்டு ஐந்­துபேர் இணைந்து முல்­லைத்­தீவு நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்தோம் .அந்த காலப்­ப­கு­தியில் எமது நிலங்­க­ளுக்கு பதி­லாக வேறு நிலங்­களை தரு­வ­தாக அங்கே இரா­ணுவ தரப்பில் தெரி­வித்­தார்கள். ஆனால் நாம் அதற்க்கு சம்­ம­திக்­க­வில்லை. எமது சொந்த நிலம் வேண்டும் என்றே அன்­றி­லி­ருந்து இன்­று­வரை பல்­வேறு வழி­களில் போராடி வரு­கின்றோம் என்­றனர்.

இதன்­போது காணி விடு­விப்பு தொடர்பில் அர­சாங்க தரப்­புடன் கலந்­து­ரை­யா­டி­னீர்­களா என ஐநா பிர­தி­நி­திகள் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

அதற்கு பதி­ல­ளித்த பொது மக்கள் காணி விடு­விப்பு தொடர்பில் நாம் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு சென்று கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டோம். எம் சார்பில் மக்கள் பிர­தி­நி­தி­களும் இருந்­தனர். பல­முறை அர­சுடன் கலந்­து­ரை­யா­டினோம். இருந்தும் இது­வரை எமக்கு எமது நிலங்கள் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை படவில்லை என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை ஐநா விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று முல்லைத்தீவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு போரால் பாதிக்கப்பட்ட இடங்கள் பார்வையிட்டதுடன் மக்களை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.