Hot News
Home » செய்திகள் » மஹிந்த ஆட்சியில் இடம்­பெற்ற தவ­று­க­ளுக்கு பொறுப்பேற்கிறேன்

மஹிந்த ஆட்சியில் இடம்­பெற்ற தவ­று­க­ளுக்கு பொறுப்பேற்கிறேன்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சி­யலில் மிகுந்த அனு­பவம் உள்­ளவர். எனவே அவ­ருக்கு எனது ஆலோ­சனை தேவை­யில்லை. இருந்­த­போ­திலும் அவர் எடுத்த சகல தீர்­மா­னங்­களின் பின்­னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவ­ரது காலப்­பி­ரிவில் இடம்­பெற்ற தவ­று­க­ளுக்கு நான் பொறுப்­பேற்­கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஒரு சர்­வ­தி­கா­ர­யாகச் செயற்­பட்­ட­தா­கவும் அவர் எவ­ருடை ஆலோ­ச­னை­க­ளையும் செவி­ம­டுக்க வில்லை என­வு­மங சில தரப்­பினர் குறிப்­பி­டு­கின்­றனர். இதே­வேளை அதற்கு மாற்­ற­மான கருத்தை மற்றும் சில தரப்­பினர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

மேலும் அவர் எமது ஆலோ­ச­னை­களின் பிர­காரம் செயற்­ப­டா­த­த­னால்தான் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­தாக சிலர் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் மஹிந்த ராஜ­பக்க்ஷ எம்­மை­விட அர­சி­யலில் மிகுந்த அனு­பவம் உள்­ளவர். எனவே அவ­ருக்கு எனது உப­தேசம் அவ­சி­ய­மல்ல. இருந்­த­போ­திலும் அவர் எடுத்த சகல தீர்­மா­னங்­களின் பின்­னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவ­ரது காலப்­பி­ரிவில் இடம்­பெற்ற பிழை­க­ளுக்கு நான் பொறுப்­பேற்­கிறேன்.

மேலும் எமது அர­சாங்கம் ஒரு­போதும் வைராக்­கிய அர­சியல் நடத்­தப்­போ­வ­தில்லை. எமக்­கெ­தி­ராக செயற்­ப­டு­ப­வர்­க­ளையும் நாம் உரிய சட்டப் பிர­காரம் முன்­னெ­டுப்­போமே தவிர சட்­டத்­திற்கு முர­ணாக செயற்­படப் போவ­தில்லை. எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் சட்­டத்­திற்குப் புறம்­பாகச் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அவ­ரது குடும்­பத்­தினர் மீது நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நெருக்­க­டிகள் தொடர்பில் கவ­லை­ய­டைய வேண்­டி­யுள்­ளது. பழி­வாங்கும் பட­லத்­தையே தேசிய அர­சாங்கம் அரங்­கேற்றி வரு­கி­றது.

எமக்­கெ­தி­ராக அர­சாங்கம் முன்­கெ­டுக்கும் கெடு­பி­டிகள் தொடர்பில் எமக்கு மிகுந்த வைராக்­கியம் ஏற்­பட வேண்டும். எனினும் நாம் மீண்டும் பத­விக்கு வரு­கின்­ற­போ­திலும் வைராக்­கிய உணர்­வுடன் செயற்­ப­டப்­போ­வ­தில்லை.

இருந்­த­போ­திலும் அதன் மூலம் பிழை செய்­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காது சுதந்­தி­ர­மாக விட்­டு­வி­டு­வ­தா­கவும் பொருள்­கொள்ள முடி­யாது. எனவே பிழை­செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்­திற்கு இணங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­வரும். ஆகவே தேசிய வளங்­களை சூறை­யாடி நாட்­டுக்குப் பாத­க­மான முறையில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற போதிலும் நல்லாட்சியில் இடம்பெறும் பிழைகளைத் தேடிக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனக் கருதுகிறேன். ஏனெனில் அவ்வாறான மோசடிகளை தற்போதே வெளிப்பட்டு வருகின்றது என்றார்.