Hot News
Home » செய்திகள் » மகிந்த காலத்தில் குருதி ஆறு ஓட வாய்க்கால் வெட்டியவர் ஹிஸ்­புல்லா

மகிந்த காலத்தில் குருதி ஆறு ஓட வாய்க்கால் வெட்டியவர் ஹிஸ்­புல்லா

மகிந்­த­வின் காலத்­தில் இரத்த ஆறு ஓட வாய்க்­கால் வெட்­டிக் கொடுத்­த­வர், வடக்கு–கிழக்கு இணைந்­தால் இரத்த ஆறு ஓடும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றார். வடக்­கும் – கிழக்­கும் இணை­யா­விட்­டால், பாதிக்­கப்­ப­டப்­போ­வது கிழக்கு மாகா­ணம்­ தான்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இணைத் தலைவருமான பிர­சன்னா இந்­தி­ர­கு­மார் தெரி­வித்­தார்.

வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்­டால் இரத்த ஆறு ஓடும் என்று இரா­ஜாங்க அமைச்­சர் ஹிஸ்­புல்லா நாடா­ளு­மன்­றில் உரை­யாற்­றி­யமை தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, வடக்கு– கிழக்கு இணைந்­தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய அவர், அந்த ஆறு எந்த இடத்­தில் இருந்து ஊற்­றெ­டுக்­கும், அது எங்கு சென்­ற­டை­யும், அந்த ஆற்­றி­னால் பய­ன­டை­வோர் யார் போன்­ற­வற்­றை­யும் கூற­வேண் ­டும். இத­னைச் சரி­யாக கூற அவ­ருக்குத் தெரி­யாது. அவர் மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­யல்ல. அவர் மக்­க­ளால் நிரா­க­ரிக்­க­பட்­ட­வர் என்­பதை முத­லில் புரிந்­து ­கொள்­ள­வேண்­டும்.

மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ராக இருந்­தி­ருந்­தால் தற்­போ­தைய அர­சி­யல் நிலை­யைக் கருத்­திற் கொண்டு பொறுப்பு வாய்ந்த கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருப்­பார். மகிந்த ஆட்சிக் காலத்­தில் நாட்­டின் தமிழ், முஸ்­லிம் மக்­கள் வாழும் இடங்­கள் பல­வற்­றில் இரத்த ஆறு ஓடி­ய­போது அதற்கு வாய்க்­கால் வெட்­டிக் ­கொ­டுத்­த­வ­ரல்­லவா?

அவ்­வா­றா­னோ­தோர் ஆட்­சி­யா­ளர் இலங்­கைக்கு மீண்­டும் அரச தலை­வ­ராக வர­வேண்­டும் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் மக்­களைத் திரட்­டி­ய­வர் நீங்­க­ளல் லவா.?

ஆனால் மக்­களோ உங்­களை கருத்­தி­லெ­டுக்­காது தற்­போ­தைய அரச தலை­வ­ருக்கே வாக்­க­ளித்­த­னர். இதி­லி­ருந்து நீங்­கள் பாடம் கற்­க­வில்­லையா? இவ்­வாறு சுய­நல அர­சி­யல் செய்­யும் நீங்­கள் தற்­போது திடீ­ரென்று இவ்­வா­றான கருத்­தினை வெளி­யி­டு­வ­தன் நோக்­கம் என்ன.?

தமிழ் முஸ்­லிம் மக்­க­ளி­டத்­தில் பல­நெ­டுங்­கா­ல­மாக இருந்து வரு­கின்ற உற­வினை கேள்­விக் குறி­யாக்­கு­வ­தா­கவே உங்­கள் கருத்து அமைந்­துள்­ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் பொரு­ளா­தார ரீதி­யான உற­வில் இரண்டு இன­மும் பின்னி பிணைந்து பல­த­ரப்­பட்ட வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இந்த உறவு பல­நெ­டுங்­கா­ல­மாக இருந்து வரு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே தற்­போது பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற்­றம் கண்­டுள்­ளீர்­கள் என்­ப­தை­யும் நீங்­கள் மறக்­க­வேண்­டாம்.

எங்­க­ளு­டன் இணைந்து வாழ விரும்­பா­விட்­டால் நாங்­கள் எவ்­வாறு பின்னிப் பிணைந்து வாழ முடி­யும் என்­பது எம் மக்­க­ளுக்­கும் எங்­க­ளுக்­கும் தெரி­யும். பிரி­வினை எங்­கி­ருந்து வரு­கின்­றது? இதனை உரு ­வாக்­கு­வது யார்? இதன் விளை­வு­கள் என்ன? போன்­ற­வற்றை எதிர் கா­லத்­தில் சிந்­தித்துச் செயற்­பட வேண்­டிய நிலை­யே இப்­போது தோன் றி­யுள்­ளது, என்­றார்.

Author: TELO Media Team 1