Hot News
Home » செய்திகள் » பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சனத் புஜித நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பரீட்சைகள் பணிப்பாளராக செயற்பட்டவர். அத்துடன், இவர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சைகள் ஆணையாளராகவும் (நிருவாகப் பிரிவு) பல வருடங்கள் சேவையாற்றிய ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் விசாரணை நடவடிக்கையொன்றின் காரணமாக தற்போதைய பணிப்பாளர் நாயகமாக இருந்த டபிள்யு.என்.எம்.ஜே. புஷ்பகுமார கல்வி அமைச்சுக்கு நேற்று (14) திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.