Hot News
Home » செய்திகள் » நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வடமாகாணசபையின் ஒத்துழைப்பு அவசியம்

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வடமாகாணசபையின் ஒத்துழைப்பு அவசியம்

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு வடமாகாணசபையின் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை இரண்டாக பிளவுபடாது ஒன்றிணைந்த நாடாக முன்னெடுப்பதற்கும் தேசிய கொடியின் கௌரவத்தை பாதுகாத்தும் தெற்கு மற்றும் வடக்கில் உள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கு மாறான செயற்படுபவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் யாப்பில் இடம் உண்டு. இதனால் வடக்கு முதலமைச்சர் வடமாகாண அமைச்சர்கள் பொதுமக்கள் மத்தியில் ஐக்கியத்தை முன்னெடுத்து கல்வி கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இன மத வேறுபாடு இன்றி செயற்பட வேண்டுமென்றும் கூறினார்.

வடமாகாண அமைச்சரான கலாநிதி க.சர்வேஸ்வரன் மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வில் நடந்து கொண்ட முறையை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இவ்வாறான நிலை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு முதலமைச்சரும், மாகாண சபை அமைச்சர்களும் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் அங்குள்ள மக்கள் தற்பொழுது சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தாப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சகலவற்றையும் அரசாங்கம் செய்துள்ளது. 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்து பெறப்பட்ட சுதந்திரத்தின் மூலம் இன்ற வடக்கு மக்களே பெரிதும் நன்மை அடைகின்றனர். எனவே இதனை தொடர்ந்தும் வலுப்படுத்துவதற்கு வடக்கின் முதலமைச்சரைப் போன்று மாகாண அமைச்சர்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.