Hot News
Home » செய்திகள் » வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டி

வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்பொழுது, வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கட்சியின் செயலாளர் மேலும் அறிவித்துள்ளார்.

Author: TELOMedia