Hot News
Home » செய்திகள் » சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானம்

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானம்

மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக தீவக மாவீரர் தின செயற்குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (19.11.2017) ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தினை உரியவகையில் அனுஷ்டிக்குமுகமாகவே இச் சிரமாதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இச் சிரமதான நிகழ்வுகளில் உணர்வு பூர்வமாக யாழ். தீவக மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் அவர்களும் கலந்து கொண்டனர். 27 ஆம் திகதி இத் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

இத் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நடுகற்கள் உள்ளிட்ட துயிலுமில்ல கட்டமைப்புக்கள் யாவும் இராணுவத்தினரால் ஏற்கனவே அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

saddi thuyilum illam 2

Author: TELOMedia