சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான காணியை மோசடி செய்து உடைமையாக்கிய குற்றச்சாட்டுத் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கொழும்பு மோசடிப் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, முன்னாள் முதலமைச்சரின் முகவரியை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் கொழும்பு மோசடிப் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நீதிவானுக்கு தெரிவித்தனர்.
முதலாம் சந்தேக நபர் அறியப்படாத ஒரு நபரல்ல என்று தெரிவித்த நீதிவான் தராதரம் பார்க்காது யுனிட்டி பில்டர்ஸ் நிறுவனத்தோடு தொடர்புபட்ட அவரது சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக வாக்கு மூலத்தைப் பதிவு செய்து உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு கடும் தொனியில் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.