Hot News
Home » செய்திகள் » தமிழ் மக்களுக்கு உளப்பூர்வமான தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழ் மக்களுக்கு உளப்பூர்வமான தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழர்கள் உவகையுடன் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவர்களும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.

தமிழர்கள் இன, மத, பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும், தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Author: TELOMedia