Hot News
Home » செய்திகள் » யாழில் வேட்பாளரின் பெயர்களை நள்ளிரவில் வீதிகளில் எழுதும் இராணுவம்

யாழில் வேட்பாளரின் பெயர்களை நள்ளிரவில் வீதிகளில் எழுதும் இராணுவம்

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரால் வடக்கு மாகணசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களை வெற்றியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் இராணுவம் முன்னெடுத்துவரும் நிலையில், இதற்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடக்கு தேர்தலில் றெமீடியஸ், சீராஸ், உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலமையகம் தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளது. இவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளிலும் இராணுவம் கடும் முனைப்புடன் செயற்படுகின்றது. குறிப்பாக தீவுப் பகுதியில் றெமீடியஸின்,விளம்பர சுவரொட்டிகளை சிவில் உடையில் இராணுவத்தினரே ஒட்டி வருகின்றனர்.

மேலும் வீதி கள் முழுவதும் குறித்த வேட்பாளரின் பெயரை நள்ளிரவு 12மணி முதல் அதிகாலை வரை இராணுவமே எழுதி வருகின்றது. இதனை பலர் அவதானித்திருக்கின்றனர். இதனைவிட றெமீடியஸிற்கு வாக்களிக்குமாறு சகல முன்னாள் போராளிகளுக்கும்,இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த அடிப்படையில் தனக்கு 6ஆயிரம் வாக்குகள் உறுதியாக விழும் என குறித்த வேட்பாளர் தனக்கு நெருங்கிய சகாக்களுக்கு கூறியுள்ளார். இவர்கள் தவிர வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலுள்ள வேட்பாளர்கள் இருவரையும் இராணுவம் தமது முயற்சியில் வெற்றி பெறச் செய்வதற்கான முனைப்புக்களை காட்டி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhxy.html#sthash.uhtNa5N4.dpuf

Author: TELO Media Team 1