Hot News
Home » செய்திகள் » கொடிகாமம் மீசாலைப் பகுதியில் அங்கஜனின் ஆட்கள் மீது தாக்குதல்

கொடிகாமம் மீசாலைப் பகுதியில் அங்கஜனின் ஆட்கள் மீது தாக்குதல்

யாழ்.மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் ஆட்கள் கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்தினால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் மீசாலைப் பகுதியிலுள்ள பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை பொது மக்கள் தமது சொந்தப் பணத்தினைச் செலவு செய்து புனரமைப்பு செய்து வைத்திருந்தனர்.

இந்த பஸ் தரிப்பு நிலையத்தில் அங்கஜனின் ஆட்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது புனரமைப்பிற்கான பணத்தினை வழங்கிய அன்பர் ஒருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது அவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட வேளை பொது மக்கள் அங்கஜனின் ஆட்களை நையப் புடைத்து அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தின் உதவியுடன் இரவிரவாக அப்பகுதியெங்கும் அங்கஜனின் ஆட்கள் குறிப்பிட்ட சிலரை தேடி அலைந்துள்ளனர். இதனால் நேற்றிரவு முழுவதும் அப்பகுதியெங்கும் பரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author: TELO Media Team 1