Hot News
Home » செய்திகள் » மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களுக்கு யோகேஸ்வரன் எம்.பி. விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களுக்கு யோகேஸ்வரன் எம்.பி. விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான பாலையடிவெட்டை, புதுமுன்மாரிச்சோலை ஆகியவற்றிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விஜயம் செய்து, மக்கள் சந்திப்பை மேற்கொண்டதுடன், அம்மக்களின் தேவைகள் குறித்தும் அறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அக்கிராம மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் பிரான்ஸ் அன்னை தெரேசா சமூக நற்பணி மன்றத்தின் மூலம் கொய்யாந்தோட்டம் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழாவையொட்டி மதிய உணவுகள் ஒழு செய்து வழங்கப்பட்டதுடன், பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இக்கிராமம் கடந்த யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமாகும். இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து தற்போது குடியேறியுள்ளனர். ஆனால் இக்கிராம மக்களின் குறிப்பிட்ட தொகையினர் இன்றும் குடியேறவில்லை. காரணம் இங்கு தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் நிறைந்து காணப்படுவதாகும். கிராம வரலாற்றிலேயே தற்போதே இப்பகுதிக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

இதேவேளை இப்பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அக்கிராம மக்களின் அடிப்படை தேவையாக நிண்ட காலமாக இருக்கும் குடிநீர் பிரச்சினை சார்பாக கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இணைப்பாளர் ச.ஜெயகரன், பேரவையின் உறுப்பினர்கள், பட்டிருப்புத் தொகுதி இளைஞர் அணி செயலாளர் ந.துஷ்யந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Author: TELO Media Team 1