Hot News
Home » செய்திகள் » சுவரொட்டிகளால் நிறைந்து வழியும் யாழ்ப்பாணம்! வீதிகளை தேடித் திரியும் பயணிகள்

சுவரொட்டிகளால் நிறைந்து வழியும் யாழ்ப்பாணம்! வீதிகளை தேடித் திரியும் பயணிகள்

யாழ் மாவட்டத்தில் வீதி பெயர்ப்பலகைகள் தேர்தல் சுவரொட்டிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்வி நிலையங்கள் மற்றும் தேர்தல் சுவரொட்டிகளை வீதி பெயர்ப்பலகைகளில் ஒட்டுவதால் பொது மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட காலங்களுக்குப் பின்னர் யாழ் மாவட்டத்தில் பல வீதிகளுக்கு, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் நகரசபையினூடாக வீதி பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ள நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் சமூக நலனைக் கருத்தில் கொள்ளாது அவற்றில் தமது கல்வி நிலையங்களின் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் சுவரொட்டிகள் உட்பட பல் தேசிய கம்பனிகளும் இவற்றில் தமது சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு புதிதாக வருபவர்கள் உட்பட பலரும் வீதிகளை அடையாளம் காணமுடியாமல் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு முறையற்ற செயற்பாட்டில் ஈடுபடுவோர் மீது யாழ் மாநகர சபை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Author: TELO Media Team 1