Hot News
Home » செய்திகள் » யாழ் நகரில் நவநீதம்பிள்ளை

யாழ் நகரில் நவநீதம்பிள்ளை

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் இரவு 7.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கினார்.

அதன் பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய சாலையின் புதிய கட்டிடத்தொகுதியையும் பார்வையிட்டார்.

நாளையதினம் ஏ9 வீதியால் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

Author: TELO Media Team 1