Hot News
Home » செய்திகள் » கொலைகள் செய்து நாட்டை அபிவிருத்தி செய்யும் புதுமையான போதனை

கொலைகள் செய்து நாட்டை அபிவிருத்தி செய்யும் புதுமையான போதனை

‘கோத்தாபய அவர்களே! ஒரு ஹிட்லராக ஆகியாவது, இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியாவது இந்த நாட்டை கட்டியெழுப்புங்கள்!”

இவ்வாறு கூறியிருப்பது சாதாரணமான ஒருவரல்ல…. அஸ்கிரிய மகா சங்க சபையின் அனுநாயக்க ஒருவரே.முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் அன்னதானத்தை உண்ட திருவாயால் இந்தப் போதனை வழங்கப்பட்டுள்ளது. இங்கு இவர் கௌத புத்த பெருமானை நினைவு கூருவதற்கு பதிலாக ஹிட்லரை நினைவு படுத்தியிருப்பது முக்கிய விடயமாகும்.

ஹிட்லர் என்பவர் ஜேர்மன் சமூகத்தின் 80 இலட்சம் பேரை கண்மூடித்தனமாகக் கொலை செய்த கொடூரமான ஒருவர் என்பதை சிறு பிள்ளைகளும் அறிவார்கள். பரிசுத்த ஜேர்மன் இனத்தைப் போன்றே பரிசுத்த சிங்கள பௌத்த இனத்தவரின் கனவு முன்னணி அனுநாயக்கர்களுக்கு உள்ளது என்பது அனுநாயக்கரின் கூற்றிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. மல்வத்து மற்றும் ஏனைய பீடங்களோடு ஒன்றாக அமர முடியாது எனக் கூறிக் கொண்டு தலைவீக்கம் பெற்று தலதா மாளிகையின் உயர்பீடத்தைப் புறக்கணித்தது அஸ்கிரிய பீடமாகும். தமது எண்ணங்களையொத்த “மஹ ராஜா” (மஹிந்த)வைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் தற்போது அவர்களது கனவாக ஆகியிருப்பது ஹிட்லராகும்.

ஹிட்லர் 80 இலட்சம் மக்களைக் கொன்று குவித்துவிட்டு தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் தனது குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தனது தலையில் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். தற்போது ஹிட்லர் இல்லாததால் அவரது பண்புகளோடு இணைந்து போகும் ஒரு துண்டு அரிசியைக் கூட தேடிக் கொள்வதற்கு இனவாத, குலவாத, கோத்திரவாத, மத வாத நோக்கங்களைக் கொண்டிருப்பது இந்த ‘பௌத்த புத்திரனின்” கூற்றிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை ஒரு ஹிட்லராக ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு இவ்வாறான பௌத்த புத்திரர்களுக்கு தோன்றியிருப்பது அவரின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற நல்ல நல்ல விளையாட்டுக்களைக் கண்டு கொண்டதனாலாகும். உண்மையிலேயே அந்தக் காலத்தில் மன நோயாளர்களைத் தவிர ஏனைய அனைவரும் மரண அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். அஸ்கிரிய தரப்பினருக்கு அது பற்றித் தெரியாதிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த வெலிவிட்ட அசரண சரண சரணங்கர தேரரின் தலைமையில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனும் இன்றையதைப் போன்று துறவி உடை நிறைந்திருந்த யுகத்தில் எழுதினார்.

அதில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்.

‘வயது போன குரங்குகள் சிங்கத்தின் தோலைப் போர்த்திக் கொண்டதைப் போல துறவி உடை அணிந்தவர்கள் சன்யாசிகளாகி பௌத்த மதத்தைச் சீரழிக்கின்றனர்” (இது சிங்களக் கவியின் நேரடி மொழி பெயர்ப்பு)

சங்கராஜ தேரரின் பெறுமதி விட இன்று விளங்குகின்றது. நாட்டின் துரதிஷ்டம் அவ்வாறான அனுநாயக்கர்களின் புள்ளிகள் கூட இன்றில்லை.

இந்த அழிவை முன்னரே அறிந்து கொண்ட புத்த பெருமான் கடந்து செல்வதற்கு முன்னர் பெரும் முதிர்ச்சி நிலையில் தான் அதுவரையில் செய்து வந்த சொற்பொழிவுகளைக் குறைத்துக் கொண்டார்.

சிரமமான தர்மம் அதில் முக்கியமானது. ஒற்றுமையாக ஒன்று கூடுதல், ஒற்றுமையாகச் செயற்பாடுகளில் ஈடுபடல், விதிக்கப்பட்ட சட்டங்களை மீறாத சிரமமான தர்மங்களில் ஒன்றைக் கடைபிடிக்கும் போதே மக்கள் நலன் ஏற்படுகின்றதென்றால் ஏழையை காக்கின்ற போது எந்தளவு நலன் கிடைக்கும் என்பதை புத்த பெருமான் கற்றுக் கொண்டார்.

அஸ்கிரிய பீடத்தின் போதனையை கடைபிடிக்கப் போனால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு இடம்பெறப் போவது ஹிட்லர் ஒருவரைப் போல ஆவதற்கு முன்னரே தற்கொலை செய்து கொள்ளும் நிலையேயாகும்.

அனுநாயக்க கோணத்தில் நாட்டை ஆட்சி செய்வது பெரும் பேரழிவுகளைக் கொண்டு வருவதாகும் என மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதியிருந்தார். வல்பொல ராஹுல தேரரினாலும் கட்டியெழுப்ப முடியாது போன, விக்கிரமசிங்கவினாலும் நினைவு கூர முடியாது போன பௌத்த சாசனத்திற்கு கோத்தாவின் துணை!

அதுவும் இதே போன்றதே என லேக்கவுஸ் பத்திரிகையான ‘ரெச’ தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Author: TELO Media Team 1