Hot News
Home » செய்திகள் » இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் 22/06/2018 அன்று நடைபெற்றது. அதன் போது சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக க.நல்லதம்பி (மட்டக்களப்பு கல்வி வலயம்), பொதுச் செயலாளராக சரா.புவனேஸ்வரன் (யாழ்ப்பாணம் கல்வி வலயம்), நிதிச் செயலாளராக க.தேவநேசன் (தென்மராட்சி கல்வி வலயம்), நிர்வாகச் செயலாளராக கு.அருணாசலம் (கல்குடா கல்வி வலயம்), கல்வி கலாசார செயலாளராக நா.காளிராசா (கிண்ணியா கல்வி வலயம்),

பத்திரிகைச் செயலாளராக சு.உதயகுமார் (வவுனியா கல்வி வலயம்), பிரசார செயலாளராக ஏ.மடுத்தீன் (மன்னார் கல்வி வலயம்), துணைத் தலைவர்களாக (ஆண்கள்) கோ.செல்வநாயகம் (திருகோணமலை கல்வி வலயம்), சொ.லோகேஸ்வரன் (யாழ்ப்பாணம் கல்வி வலயம்), துணைத் தலைவர்கள் (பெண்கள்) சரஸ்வதி பாலசுப்ரமணியம் (பண்டாரவளை கல்வி வலயம்), வசந்தா குமாரசாமி (மட்டக்களப்பு கல்வி வலயம்),

துணைப் பொதுச் செயலாளர்களாக சி.சசிதரன் (பட்டிருப்பு கல்வி வலயம்), சி.கணேசலிங்கம் (யாழ்ப்பாணம் கல்வி வலயம்), துணைப் பொதுச் செயலாளர் (பெண்) சுஜந்தினிதேவி யுவராஜா (திருகோணமலை கல்வி வலயம்), துணை நிதிச் செயலாளராக (ஆண்) கி.இந்திரன் (வடமராட்சி கல்வி வலயம்),

துணை நிதிச்செயலாளராக (பெண்) வளர்மதி சங்கரலிங்கம் (வலிகாமம் கல்வி வலயம்), ஆகியோரோடு வடக்கு மாகாணச் செயலாளராக ஜெ.நிசாகர (கிளிநொச்சி கல்வி வலயம்), கிழக்கு மாகாணச் செயலாளராக இரா.சச்சிதானந்தம் (மூதூர் கல்வி வலயம்), ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களோடு மாவட்டங்களின் தலைவர்களும், மாவட்டங்களின் செயலாளர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன் சங்கத்தின் ஆலோசகர்களாக த.மகாசிவம் மற்றும் ஈ.ஜெ.மகேந்திரா ஆகொயோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

Author: TELO Media Team 1