Hot News
Home » செய்திகள் » வடக்கில் உணவகங்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை

வடக்கில் உணவகங்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகா­ணத்­தில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வு­க­ளின் தரத்தை பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும் என்று மாகா­ண­ச­பை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றப்­பட்­டுள்­ளது.

தனது திணைக்­கள அதி­கா­ரி­கள் ஊடாக அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன் என்று வடக்கு சுகாதார அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினருமான சபா.குக­தாஸ், வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் பிரே­ரணை சமர்­பித்­தார். வடக்கு மாகா­ணத்­துக்கு உட்­பட்ட உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வின் தரம் தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

இர­சா­ய­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உண­வு­கள் சுவை­யூட்­டப்­ப­டு­ கின்­றமை, பாவித்த எண்­ணெய் மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, உண­வு­கள் பழு­த­டை­யாது நீண்ட காலம் இருப்­ப­தற்கு எண்­ணெய்க்­குள் பிளாஸ்­ரிக் பயன்­ப­டுத்திப் பொரிக்­கின்­றமை, மாமிச உண­வு­கள் நீண்ட கால­மாக குளிர்­சா­த­னப் பெட்­டிக்­குள் வைக்­கப்­ப­டு­கின்­றமை, கொத்­து­ரொட்­டிக்கு இர­சா­ய­னம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, பழங்­க­ளில் இர­சா­ய­னம் கலந்து விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை போன்ற பிரச்­சி­னை­கள் காணப்­ப­டு­கின்­றன.

தற்­போ­தைய காலத்­தில் கண­வன் மற்­றும் மனைவி இரு­வ­ருமே தொழில் புரி­ப­வர்­க­ளாக இருப்­ப­த­னால், கடை­க­ளி­லேயே பெரும்­பா­லா­ன­வர்­கள் உண­வு­களை வாங்­கு­கின்­ற­னர். உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வு­கள் தர­மாக இருக்­க­வேண்­டும். பொதுச்­சு­கா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக இது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று அவர் தனது பிரே­ர­ணை­யைச் சமர்­பித்­துக் கோரி­னார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலருமான விந்­தன் கன­க­ரட்­ணம் பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்­தார். இந்த விட­யத்­தில் சுகா­தார அமைச்­சு­டன், உள்­ளூ­ராட்சி அமைச்­சும் தொடர்­பு­பட்­டுள்­ளது. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டா­லும் தொடர்ந்­தும் உண­வு­க­ளின் தரம் குறை­வாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பாண நக­ரப் பகு­தி­யில் இது அதி­கம் என்­றார்.

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜி.குண­சீ­லன், பிரே­ர­ணை­யில் கூறப்­பட்ட பல விட­யங்­கள் உண்­மை­யா­னவை. உண­வு­க­ளின் தரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் எமது திணைக்­கள அதி­கா­ரி­கள் ஏற்­க­னவே நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர். மேலும் இறுக்­க­மாக நட­வ­டிக்கை எடுக்­கப் பணிப்­புரை விடுக்­கின்­றேன்.

தள்­ளு­வண்­டி­லில் உணவு விற்­பனை செய்­வோர், ஒவ்­வொரு நாளும் எண்­ணெய் மாற்­ற­வேண்­டும் என்று சொன்­னால், அவர்­க­ளின் உழைப்பு எண்­ணெய் வாங்­கவே போதாது. அத­னை­யும் கருத்­தில் கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.