Hot News
Home » செய்திகள் » சுவிஸில் புளொட்டின் வீரமக்கள் தின நிகழ்வில் ரெலோ உறுப்பினர்கள் பங்கேற்பு

சுவிஸில் புளொட்டின் வீரமக்கள் தின நிகழ்வில் ரெலோ உறுப்பினர்கள் பங்கேற்பு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், “29 வது வீரமக்கள் தினம்”.நிகழ்வு மிகசிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.

சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் சுவிஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தற்போது எமது ரெலோ சுவிஸ் கிளை, சுவிஸ் அரசியல் கட்சிகளுடனும் தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து , எமது நாட்டில் கல்வி, தொழில் நுட்ப அறிவு, பொருளாதார வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு முதலீடுகளை எமது தேசத்தில் அதிகரிக்கும் நோக்கத்தில் ஆன முயற்சிகளில் இறங்கியுள்ளது.