Hot News
Home » செய்திகள் » விந்தனூடாக பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கிவைப்பு

விந்தனூடாக பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கிவைப்பு

வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிதிச் செயலருமான என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ். வேலணை செட்டிபுலம் தமிழ் கலவன் பாடசாலைக்கு ரூபா ஒரு இலட்சத்திற்கு (100,000.00) போட்டோ கொப்பி இயத்திரம் கொள்வனவு செய்து, 12.07.2018 இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செ. பார்த்தீபன், சி. அசோக்குமார் ஆகியோர்களூடாக வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் தீவக வலய கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திரு. ஜெயரூபன் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி புஸ்பநேசா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.