Hot News
Home » செய்திகள் » அரசியல் ரீதியான தீர்வுக்காய் தேசிய கொள்கையுடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

அரசியல் ரீதியான தீர்வுக்காய் தேசிய கொள்கையுடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வை காண்பதற்கு தேசிய கெள்கையுடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்க் கட்சிகள் பிளவடையாது ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்த அவர், பிளவுபடும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து ரெலோ செயற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1983ஆண்டு ஜீலை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணி போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதன், குமார் உள்ளிட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்படுகின்றது.

இதனை முன்னிட்டு கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண சபையை யாரும் ஆட்சி செய்து விடலாம் என்ற எண்ணம் வரக்கூடாது என தெரிவித்தார்.

இதேவேளை, ஆயுதப்போராட்டம் தொடர்ந்திருந்தால் இன்று தமிழ் மக்கள் விடுதலையைப் பெற்றிருப்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.