Hot News
Home » செய்திகள் » சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு ஜனா வாழ்த்து!

சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு ஜனா வாழ்த்து!

தேசிய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலய மாணவி முதலாமிடம் பெற்று மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதன்மூலம் தேசிய மட்டத் தமிழ் மொழி தின இலக்கிய விமர்சனப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தைப் பெற்றது.

இவரது இல்லத்திற்கு சென்ற முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) குறித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தரம்13இல் கல்வி பயிலும் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி த.சுதர்ணியா எனும் மாணவியே இவ்வாறு முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார்.