Hot News
Home » செய்திகள் » தீர்­வுக்கு தயங்கி­னால் எங்­கள் நடவடிக்கையை மாநாட்டில் சொல்வோம்!

தீர்­வுக்கு தயங்கி­னால் எங்­கள் நடவடிக்கையை மாநாட்டில் சொல்வோம்!

அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட சிங்­க­ளத் தலை­வர்­கள், இனப்­பி­ரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு தொடர்ந்­தும் தயக்­கம்­காட்டி வந்­தால், நாங்­கள் என்ன செய்­யப்­போ­கின்­றோம் என்­பதை எங்­கள் கட்­சி­யின் வரு­டாந்த தேசிய மாநாட்­டில் சொல்­லு­வோம். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

தமிழ் அர­சுக் கட்­சிப் பத்­தி­ரி­கை­யான ‘சுதந்­தி­ர­னின்’ பணி­ம­னைத் திறப்பு விழா சாவ­கச்­சே­ரி­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எமது மக்­க­ளின் நீண்ட கால இனப்­பி­ரச்­ச­னை­யைத் தீர்ப்­ப­தற்கு நாம் பல சந்­தர்ப்­பங்­களை தற்­போ­தைய அர­சுக்­கும் வழங்­கி­னோம். அத­னைத் தீர்ப்­ப­தற்கு அவர்­கள் தொடர்ந்­தும் தயக்­கம் காட்­டி­னால் நாம் என்ன செய்ய வேண்­டும் என்­ப­தைத் தீர்­மா­னிக்க தற்­போது ஆராய்­கின்­றோம்.

அதனை விரை­வில் இடம்­பெ­ற­வுள்ள கட்­சி­யின் தேசிய மாநாட்­டில் பகி­ரங்­க­மா­கவே அறி­விக்­க­வுள்­ளோம். அடுத்த கட்ட மாற்­று­வழி தேட தள்­ளப்­பட்­டு­விட்­டோம் என்­ப­த­னை­யும் பகி­ரங்­க­மாக கூறு­கின்­றேன்.

கூட்­ட­மைப்­பின் 433 உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண சபை உறுப்­பி­னர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் இனத்­தின் விடு­த­லைக்­காக, மக்­க­ளுக்­காக முழு­மை­யாக தம்மை அர்ப்­ப­ணிக்­கத் தயா­ரா­க­வேண்­டும் – என்­றார்.