இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன், இணையத்தளம், தாய்வீடு பதிப்பகம் ஆகியவற்றின் பணிமனை நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள பணிமனை இன்று முற்பகல் 10.30 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ஸ்ரீநேசன், கோடீஸ்வரன், சிவமோகன் மற்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.