Hot News
Home » செய்திகள் » காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு பொறுப்புக்கூற வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு பொறுப்புக்கூற வேண்டும்

வடக்­கில் இருப்­ப­வர்­க­ளுக்கு ஆணைக் குழு மீது நம்­பிக்கை ஏற்­ப­ட­வில்லை. நம்­பிக்கை ஏற்­பட வேண்­டி­யி­ருப்­பதை ஏற்­றுக் கொள்­கின்­றோம். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தாமாக காண­மல் போக­வில்லை. வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­கள். இந்த உண்­மையை அரசு ஏற்­றுக் கொள்ள வேண்­டும்.

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்­கள் என்­பதை அரசு ஏற்­றுக் கொண்டு பொறுப்­பு­டன் செயற்­பட வேண்­டும். பொறுப்­புக்­கூ­றலை அரசு செய்ய வேண்­டும். சில முறைப்­பா­டு­கள் சம்­பந்­த­மாக சில நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். அதைப் பகி­ரங்­க­மாக சொல்ல முடி­யாது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு வழங்­கப்­ப­டும் இழப்­பீடு, வாழ்­வா­தார உதவி எது­வும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வ­ருக்கு ஈடா­காது என காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கத்­தின் தலை­வர் சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கம் தொடர்­பாக விளக்­க­ம­ளித்­தல் மற்­றும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வி­னர்­க­ளின் தேவை­கள் தொடர்­பாக அறிந்து கொள்­ளல் என்­ப­வற்­றுக்­காக கொழும்­பில் நேற்று மக்­கள் சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே சாவிய பீரிஸ் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

அவர் தெரி­வித்­தா­வது, நாட்­டில் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் இடம்­பெ­ற­வில்லை, அவ்­வா­றான சம்­பங்­கள் நடக்­க­வில்லை என்று கூறு­ப­வர்­க­ளைப் புறக்­க­ணிக்க வேண்­டும். நாட்­டில் காணா­மல் ஆக்­கப்­பட்­டமை மற்­றும் வலிந்து காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் இடம்­பெற்­றுள்­ளதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்ள வேண்­டும். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் எதிர்­கொண்­டுள்ள துன்­பத்தை உணர்ந்­து­கொள்ள வேண்­டும். அவ்­வா­றான சம்­ப­வங்­கள் இனி­யும் நிக­ழாது என்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கத்­தின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய இழப்­பீடு வழங்­கப்­ப­டு­வ­தால் அவர்­கள் அவற்­றைப் பெற்­றுக் கொண்டு நீதி­யைக் கோரக் கூடாது என்­பது பொரு­ளல்ல. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான உண்­மையை அறிந்து கொள்­ளும் உரிமை இழப்­பீடு வழங்­கு­வ­த­தன் ஊடாக ஒரு­போ­தும் மறுக்­கப்­ப­டாது. உண்­மை­யைத் தெரிந்து கொள்­ளல், நீதி­யைப் பெற்­றுக் கொடுத்­தல், இழப்­பீடு வழங்­கு­தல் என்­பன போன்ற எந்த நட­வ­டிக்­கை­யா­லும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் அனு­ப­வித்த துன்­பத்தை நிவர்த்தி செய்ய முடி­யாது.

இழப்­பீடு வழங்­கு­வ­தற்­கான அலு­வ­ல­கம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் நடக்­கின்­றன. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்கு அதன்­மூ­லம் இழப்­பீ­டு­கள் பெற்­றுக் கொடுக்­கப்­ப­டும்.

அர­சால் அமைக்­கப்­ப­டும் ஆணைக்­கு­ழுக்­கள் மீது பர­வ­லாக நம்­பிக்­கை­யீ­னம் காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம் மீது வடக்­கில் நம்­பிக்­கை­யற்ற நிலைமை வெகு­வா­கக் காணப்­ப­டு­கின்­றது. இந்­தப் பணி­ய­கம் அர­சால் அமைக்­கப்­பட்­டுள்­ள­போ­தும் சுயா­தீன ஆணைக்­கு­ழு­வா­கவே செயற்­ப­டு­கின்­றோம்.

எதிர்­வ­ரும் மாதங்­க­ளில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­துக்­காக 12 பிர­தேச அலு­வ­ல­கங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. 5 பிர­தேச அலு­வ­ல­கங்­கள் வடக்கு மாகா­ணத்­தின் முக்­கிய இடங்­க­ளில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

அர­சால் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய பரிந்­து­ரை­கள் அடங்­கிய இடைக்­கால அறிக்கை அரச தலை­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. பரிந்­து­ரை­க­ளில் உள்­ள­டக்­கப்­பட்ட விட­யங்­க­ளைச் செயற்­ப­டுத்­து­வ­தன் ஊடாக மட்­டும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் திருப்­தி­ய­டைய வேண்­டும் என்று நாம் எதிர்­பார்க்­க­வில்லை. அவர்­க­ளின் உற­வி­னர்­கள் தொடர்­பான உண்மை நிலைமை அறிந்து கொள்­ளும் உரி­மையை நாம் உறுதி செய்­கின்­றோம். அவர்­க­ளின் துன்­பத்தை எதைக் கொண்­டும் ஈடு செய்ய முடி­யாது என்­ப­தை­யும் உணர்ந்­துள்­ளோம்.- என்­றார்.