Hot News
Home » செய்திகள் » அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திற்கு விந்தன் உதவி

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திற்கு விந்தன் உதவி

வடக்கு மாகாணசபையின் முன்னாள யாழ். மாவட்ட உறுப்பினரும் தமிழ் விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான என். விந்தன் கனகரட்ணம் தனது 2018ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் யா/ அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திற்கு மேசைப்பந்து மேசை, பட்மின்ரன் செட், சதுரங்கம், கரம்போட், வலைப்பந்து, கரப்பந்து, உதைப்பந்து, எல்லே மூங்கில், கிரிக்கெட் மட்டை, ஈட்டி, அஞ்சல் கோல் என ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து 07.11.2018 அன்று பாடசாலையில் வைத்து வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர் திரு. நா. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை பிரதேசசபை உறுப்பினர்களான திரு. எமால்டன் ஞானகரன் லக்ஸ்மன், திருமதி வின்சன் சுபத்திரா மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு. சௌ. விஜயதாஸ், ஆசிரியர்களான திரு. து. புஸ்பகாந்தன், திரு. பா. யசோதரன் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

DSC_5455

DSC_5462