Hot News
Home » செய்திகள் » கல்முனையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டம்

கல்முனையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டம் கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தா தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் கல்முனை ஆதரவாளரின் இல்லத்தில் நேற்று (11) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் சிவாஜிலிங்கம், பொருளாளர் கோவிந்தன் ஜனா கருணாகரம், உப தலைவர்களான பிரசன்னா இந்திரகுமார், பிரதி தவிசாளர் கென்றி மகேந்திரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

அவர்களோடு இளைஞர் அணி செயலாளர் குகதாசன், மாவட்ட அமைப்பாளர் நேசன் , பிரதி மாவட்ட அமைப்பாளர் நேசராசா, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமல்ராஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

telo amparai 3

telo amparai 1

telo amparai 2

Author: TELO Media Team 1