Hot News
Home » செய்திகள் » திருமலையில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம்

திருமலையில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 27 உறுப்பினர்களை கொண்ட தலைமைக்குழுவின் கூட்டம் இடம் பெற்றுள்ளது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் திருகோணமலை அலுவலகத்தில் இன்று (12) காலை 10 மணியளவில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியது.

சமகால அரசியல் நிலைமை, நேற்று கூடிய அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் யோசனைத் திட்டம் ஆகியவை உட்பட பல விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இன்று திருகோணமலை மாவட்டத்துக்கான கட்சியின் இளைஞர் அணியின் மாவட்டக் குழு தெரிவுகளும் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், நேற்று பிற்பகல் கல்முனையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் அணிyஇன் மாவட்டக் குழு தெரிவுகள் நடைபெற்றுள்ளன.

Author: TELO Media Team 1